நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பொன்னியின் செல்வன் படத்தில் கதையின் நாயகனாக சிறப்பான நடிப்பை ஜெயம் ரவி வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூலித்திருக்கிறது.
தனக்கு ஏற்ற ஸ்க்ரிப்டுகளை தேர்வு செய்து ஜெயம் ரவி நடித்து பாராட்டுக்களை பெற்று வருகிறார். அந்த வகையில் அவரது நடிப்பில் கல்யான் கிருஷ்ணன் இயக்கத்தில் அகிலன் திரைப்படம் உருவாகியுள்ளது. விரைவில் இப்படம் வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்கு பிறகு ஜெயம் ரவியின் மார்க்கெட் தற்போது எகிறிவுள்ளது. அகிலன் படத்தின் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளம் 30 கோடிக்கும் மேல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சமீபத்தில் ஜெயம்ரவி நடித்த ஆடை விளம்பரத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.