அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி | தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ் | பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? | 98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' |

'கோமாளி' படத்தின் மூலம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெற்றிக்கு பிறகு 'லவ் டுடே' படத்தை இயக்கியுள்ளார். அதோடு இந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகியுள்ளார். இவானா கதாநாயகியாகவும், சத்யராஜ், ராதிகா, யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 2 கே கிட்ஸ்களின் சமகால வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. கடந்த 4-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் ஐந்தாறு கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் உலகளவில் தற்போது 70 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் அங்கும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
தற்போது பல தியேட்டர்களில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்க, ஓடிடி தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது.




