பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் எம்ஜிஆர்.,ன் “நினைத்ததை முடிப்பவன்” | 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்த வீரதீர சூரன் வில்லன் நடிகர் | சூர்யா 46 இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் | ஹைதராபாத்தில் நடந்த சூர்யாவின் அடுத்த பட பூஜை | 'தக் லைப்' டிரைலர் : 24 மணி நேர சாதனை என்ன? | 'ரெட்ரோ' 235 கோடி வசூல்: ஷாக் ஆன ரசிகர்கள் - உண்மை என்ன? | ஆறு மாத இடைவெளியில் அழகாக யோசிக்கும் ஆதிக் |
2023ம் ஆண்டு பொங்கலுக்கு விஜய் நடிக்கும் 'வாரிசு', அஜித் நடிக்கும் 'துணிவு' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இரண்டு படங்களின் வெளியீடும் பொங்கலுக்குத்தான் என்பதை முன்னரே அறிவித்துவிட்டார்கள். இரண்டு படங்களின் வியாபாரமும் பரபரப்பாக நடந்து வருகிறது. எந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியாகும் என அது பற்றிய தகவல்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன.
'துணிவு' படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால் 'வாரிசு' படம் அதிக தியேட்டர்களில் வெளியாகுமா என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது. இரண்டு படங்களும் சம அளவில் வெளியாகும் என ஒரு பேட்டியில் உதயநிதியே சொன்னாலும் அதை விஜய் ரசிகர்கள் நம்பத் தயாராக இல்லை.
இரண்டு படங்களும் பொங்கலுக்கு வெளியாகும் என்று மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், இன்னமும் எந்தத் தேதியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. 'துணிவு' படத்தின் பொங்கல் வெளியீடு போஸ்டர்கள் தமிழகம் முழுவதும் ஒட்டப்பட்டு வருகிறது. அதை சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பகிர்ந்தார்கள். அதையடுத்து 'வாரிசு' படத்தின் பொங்கல் வெளியீடு போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக மீண்டும் வெளியிட்டது.
தியேட்டர்கள் புக்கிங் முழுவதுமாக முடிந்த பிறகு தான் இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படலாம் எனத் தெரிகிறது. ஒரே நாளில் இரண்டு படங்களும் வருமா அல்லது ஏதாவது ஒரு படம் ஒரு நாள் முன்னதாக வெளியாகுமா என்பது சீக்கிரம் தெரிந்துவிடும்.