மொழி சர்ச்சை... கர்நாடகாவில் வலுக்கும் எதிர்ப்பு : மன்னிப்பு கேட்க முடியாது என கமல் திட்டவட்டம் | 7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ரிலீஸ் | விஜய் தேவரகொண்டா படத்தால் சூர்யா படத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ் | கூலி படத்தை தொடர்ந்து ஜெயிலர் 2விலும் நாகார்ஜூனா? | ''நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்'': எதை சொல்கிறார் மணிரத்னம்? | இட்லி கடை ரிலீஸ் தேதியில் சூர்யா 45 | தியேட்டரில் வெளியாகும் 'பறந்து போ' | என்னை பற்றிய பதிவுகளை நீக்க வேண்டும்: ஆர்த்திக்கு, ரவி மோகன் நோட்டீஸ் | மீண்டும் இணையும் வடிவேலு - பார்த்திபன் | பிளாஷ்பேக்: பூமியில் வாழ்ந்த கடவுள் 'என்.டி.ஆர்' |
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் ‛வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வரும் பொங்கல் பண்டிகைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் கடந்த 20ம் தேதி சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நாமக்கல், சேலம், புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றார்.
இந்த நிகழ்ச்சிக்காக நடிகர் விஜய் வந்த காரின் கண்ணாடியில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டிய காரணத்திற்காக அவருக்கு போக்குவரத்து விதிகளை மீறியதாக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பனையூரில் ரசிகர்களை சந்தித்த பிறகு புறப்பட்ட விஜய்யின் காரை ரசிகர்கள் பலரும் பின்தொடர்ந்து வீடியோ எடுத்தனர். அப்போது காரில் சென்ற வீடியோ வெளியாகி வைரலான நிலையில், விஜய் கார் கண்ணாடியில் கருப்பு கலர் ஸ்டிக்கர் ஒட்டியிருப்பது பற்றி பலரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் உடனடியாக விஜய் பெயரில் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபாராதம் விதித்து சென்னை போக்குவரத்து போலீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.