'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த நிலையில், ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் சமந்தா. இந்த பாடலின் மிகப்பெரிய வெற்றி சமந்தாவின் மார்க்கெட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது புஷ்பா- 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனாவே நாயகியாக நடிக்கும் நிலையில், முதல் பாகத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய சமந்தாவை மீண்டும் அணுகியபோது அவர் மறுத்து விட்டார். இதையடுத்து புஷ்பா -2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட தற்போது காஜல் அகர்வாலை அணுகி படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.




