'கல்கி 2898 ஏடி' படப்பிடிப்பில் கமல்ஹாசன் | சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் | அஜித் எடுத்த அதிரடி முடிவு | மீண்டும் போலீஸாக மிரட்ட வரும் விஜய் ஆண்டனி | ஓடிடி ரிலீஸ் : ஹிந்தி சினிமாவை பின்பற்றுமா தமிழ் சினிமா ? | மோகன்லால் - ஜீத்து ஜோசப்பின் நேரு ரிலீஸ் தேதி அறிவிப்பு | அதிக உணவுகளை சூர்யா ஆர்டர் பண்ணுவது ஏன்? ஜோதிகா வெளியிட்ட சுவாரசிய தகவல் | ஜெயம் ரவியின் ‛காதலிக்க நேரமில்லை' | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து : 'கமா' போட்ட சசிகுமார் | ரஜினி 171வது படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் - ஜீவன்? |
நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொண்டு சமீபத்தில் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார். இதுகுறித்த பரபரப்பான ஒரு சில நிகழ்வுகள் அரங்கேறி தற்போது நிலைமை சுமுகமாக மாறி உள்ளது. நயன்தாராவை பொறுத்தவரை தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து அவர் புதிய படம் ஒன்றில் நடிகர் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம்.
மாதவன், சித்தார்த் இருவருக்குமே மிக நெருங்கிய நண்பரான, அவர்களது படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சசிகாந்த், இந்த படத்தின் மூலம் இயக்குனராகிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஆயுத எழுத்து படத்தில் மாதவன், சித்தார்த் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். அதுமட்டுமல்ல மாதவனும் நயன்தாராவும் இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.