டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

ரஜினிகாந்த் நடித்த 'காலா' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹிந்தி நடிகை ஹுமா குரேஷி. அதன் பிறகு அஜித் நடித்த 'வலிமை' படத்திலும் கதாநாயகியாக நடித்தார். தற்போது 'டபுள் எக்ஸ்எஸ், டர்லா' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் 'டபுள் எக்ஸ்எல்' படத்தை ஹுமா, அப்படத்தின் ரைட்டரான முடாசர் அசிஸ் என்பவருடன் இணைந்து தயாரித்தும் வருகிறார்.
ஹுமா, முடாசர் இருவரும் கடந்த மூன்று வருடங்களாகக் காதலித்து வந்தார்களாம். இப்போது தங்களது காதலை முறித்துக் கொண்டுள்ளதாக செய்திகள்வெளியாகி உள்ளன. ஆனாலும், இருவரும் தொடர்ந்து படங்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளார்களாம். இதற்கு முன்பு முன்னாள் மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென்னுடன் கிசுகிசுக்கப்பட்டவர் முடாசர். அவர்கள் 2010ம் ஆண்டில் பிரிந்தார்கள்.
முடாசர், ஹுமா இருவரும் இணைந்து பல புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்கள். வரும் நவம்பர் 4ம் தேதி 'டபுள் எக்ஸ்எல்' படம் வெளியாக உள்ள நிலையில் இருவரும் பிரிவது பாலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.