டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

பிரபல டிவி நடிகர் பரத் கல்யாணின் மனைவி பிரியா(43) உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
90களில் பல டிவி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பரத் கல்யாண். பாட்டாளி உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். சென்னை, விருகம்பாக்கத்தில் குடும்பத்தினர் உடன் வசித்து வருகிறது. இவரது மனைவி பிரியா. கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் இவர் அவதிப்பட்டு வந்தார். கோமாவில் கூட இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று(அக்., 31) காலை அவரது உயிர் பிரிந்தது. இவரது மறைவுக்கு சின்னத்திரை நடிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரியாவின் சகோதரி வெளியூரில் உள்ளார். அவர் வந்ததும் நாளை இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. பரத் கல்யாண் - பிரியா தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.