திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
இயக்குனர் வெற்றிமாறன், லாக்கப் நாவலை ‛விசாரணை' என்ற பெயரிலும், பூமணி எழுதிய வெக்கை நாவலை ‛அசுரன்' என்ற பெயரிலும் திரைப்படமாக எடுத்துள்ளார். தற்போது விடுதலை படத்தை இயக்கி வரும் அவர், அடுத்ததாக, சி.சு.செல்லப்பா எழுதிய ‛வாடிவாசல்' நாவலை அதே பெயரில் இயக்க உள்ளார். இப்படத்தை தாணு தயாரிக்கிறார், ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார்.
ஜல்லிக்கட்டை மையப்படுத்திய இக்கதையில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ஜல்லிக்கட்டை மையப்படுத்திய ‛பேட்டைக்காளி' வெப் தொடரை தயாரித்துள்ள வெற்றிமாறன், வாடிவாசல் படத்தையும் அதே போன்ற கதையை தான் இயக்க உள்ளதாக தகவல் பரவியது. இது குறித்து விளக்கமளித்த வெற்றிமாறன், ‛பேட்டைக்காளி இன்னைக்கு நடக்குற விஷயம். வாடிவாசல் படம் 1960-ம் ஆண்டு நடக்கும் கதை' எனத் தெரிவித்துள்ளார்.