ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான ஹரிஷ் கல்யாண், 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு பல படங்களில் நடித்தாலும் 'ப்யார் பிரேமா காதல்' படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹரிஷ் கல்யாண் தனக்கென ஒரு இடம் பிடித்தார். இதற்கிடையில் ஆயுத பூஜை தினத்தில் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டது மட்டுமல்லாமல், தனது வருங்கால மனைவி நர்மதா உதயகுமாரையும் சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில், நாளை (அக்டோபர் 28) திருமணம் நடைபெற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். அவர் நமது தினமலர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: இது வீட்டில் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் தான். சென்னையில் பிறந்த நர்மதா தற்போது ஸ்டார்ட்-அப் தொழில் செய்து வருகிறார். இரண்டு பேருக்கும் நிறைய விஷயங்கள் பிடித்திருந்தது. நாளை இருவரும் சந்தோஷமாக இந்த பயணத்தை துவங்க இருக்கிறோம். அடுத்ததாக நான் நடித்து வரும் படம் ‛டீசல்'. முழுக்க முழுக்க ஆக்சன் படமான இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.