Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »

போர்வைக்குள் முத்தம் : பிக்பாஸ் அட்ராசிட்டிஸ்

27 அக், 2022 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Biggboss-contestants-kissing-in-house-under-blanket

இந்தியாவில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் ஏறத்தாழ அனைத்து மொழிகளிலுமே சூப்பர் ஹிட் அடித்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு சாதாரண ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பினும், பலர் இதை உளவியல் ரீதியாக தவறு என்றும், மிகவும் ஆபாசமாக இருப்பதாகவும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஜோடியாக நுழைந்துள்ள இருவர் போர்வையை போத்திக் கொண்டு முத்தமிடும் காட்சி தற்போது வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முத்த சம்பவம் நடந்தது தமிழ் பிக்பாஸில் அல்ல தெலுங்கில். தமிழில் பிக்பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிலையில், தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 6 கடந்த செப்டம்பர் மாதமே தொடங்கிவிட்டது.

தமிழைப் போலவே தெலுங்கிலும் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் 7 பேர் எவிக்ஷன் ஆகிவிட்டனர். தற்போது 14 நபர்களுடன் ஹவுஸ்மேட்டுகளுக்கு இடையே போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இதில் ரோஹித் சாஹினி - மரினா ஆப்ரஹாம் கணவன் மனைவி என ஜோடியாக உள்ளே நுழைந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டின் படுக்கையறையில் வைத்து முதலில் வெளிப்படையாகவே கண்ணத்தில் முத்தமிடுகிறார்கள். அதன் பின் கேமராவை பார்த்து சுதாரித்துக் கொண்டு போர்வையை மூடி முத்தமிடுகிறார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர்களின் இந்த செயலை கண்டிக்கும் அதேவேளையில் அதை காசுக்காக ஒளிபரப்பி வைரலாக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி குழுவையும் அதை தொகுத்து வழங்கும் நடிகர் நாகார்ஜுனாவையும் பலரும் கண்டித்து பதிவிட்டு வருகின்றனர். இப்போதே இப்படி என்றால் வருங்காலத்தில் படுக்கையறை காட்சியை கூட ஒளிபரப்புவீர்களா? இது மிகவும் அநாகரீகம் ஆபாசம் எனவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஜி.பி.முத்துவை பாராட்டிய சீனுராமசாமி : தீபாவளியின் வெற்றிநாயகன் என புகழாராம்ஜி.பி.முத்துவை பாராட்டிய ... வெல்லும் திறமை இறுதிச்சுற்று வெல்லும் திறமை இறுதிச்சுற்று

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

samvijayv - Chennai,இந்தியா
28 அக், 2022 - 17:37 Report Abuse
samvijayv பின்ன.., ஓவரா சூடு ஏத்தின?
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28 அக், 2022 - 06:34 Report Abuse
Mani . V இவ்வளவு தரம்தாழ்ந்த, கலாச்சார சீரழிவு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலஹாசனை கைது செய்ய வேண்டும்.
Rate this:
V.B.RAM - bangalore,இந்தியா
29 அக், 2022 - 10:01Report Abuse
V.B.RAMகலாச்சார சீரழிவு என்றால் என்ன என்பதே கமலஹாசனுக்கு தெரியாது...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in