பிளாஷ்பேக்: ஒரே பஞ்ச் டயலாக்கில் வெளிவந்த இரண்டு படங்கள் | அக்ஷய் கண்ணாவை கவர்ந்திழுக்க முயற்சித்த கங்கனா ரணாவத் | உஸ்தாத் பகத்சிங் படத்தில் நல்லா நாகப்பாவாக பார்த்திபன் | தமிழ்ப் புத்தாண்டுக்கு இன்னும் இரண்டு மாதங்களே… எந்தப் படம் வெளியாகும் ? | ஜோவிதாவின் சினிமா கணக்கை துவக்குமா 'டார்க் ஜெயிண்ட்' | நடிகையான அமைச்சர் மகள் | ஓடிடியில் சாதனை புரியும் 'துரந்தர்' | கர்நாடக அரசு சோப்பு விளம்பரத்தில் தமன்னா: வலுக்கும் எதிர்ப்பு | பிளாஷ்பேக்: நீதிமன்றத்தில் எதிரிகள், படப்பிடிப்பில் நண்பர்கள் | 50வது நாளில் 'சிறை' |

தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் இரண்டாம் பாகப் படங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வர ஆரம்பித்தது. பெரும் வெற்றி பெற்ற சில படங்களின் இரண்டாம் பாகங்களாக எடுக்க வேண்டும் என்று சிலர் எடுத்தார்கள். அவற்றில் சில வெற்றி பெற்றன, சில தோல்வியடைந்தன. இருந்தாலும் புதிதாக எந்த ஒரு படம் வெற்றியடைந்தாலும் இரண்டாம் பாகம் வருமா என்ற கேள்வியை பலரும் எழுப்புவது வழக்கம்.
அந்த விதத்தில் கார்த்தி நடித்து தீபாவளிக்கு வந்துள்ள 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகம் வரும் என நேற்று நடைபெற்ற சக்சஸ் மீட்டில் கார்த்தி தெரிவித்திருந்தார். கார்த்தி நடித்து அடுத்த வருடம் 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வர உள்ளது. அதற்கடுத்து 'கைதி' படத்தின் இரண்டாம் பாகத்தை அடுத்த வருடம் ஆரம்பிக்க உள்ளோம் என்றும் கார்த்தி நேற்று சொன்னார். 'சர்தார்' படத்தின் இரண்டாம் பாகமும் வரும் என்றும் சொன்னதால் அடுத்தடுத்து மூன்று இரண்டாம் பாகப் படங்களில் கார்த்தி நடிக்கப் போகிறார்.
தமிழில் அடுத்தடுத்து இரண்டாம் பாகப் படங்களில் வேறு எந்த ஒரு நடிகரும் நடித்தது இல்லை. 'பொன்னியின் செல்வன் 2' அடுத்த வருடம் கண்டிப்பாக வந்துவிடும். 'கைதி மற்றும் சர்தார்' ஆகியவற்றின் இரண்டாம் பாகம் சொன்னபடி நடந்தால் அது சிறப்பான விஷயம்தான்.