'அமரன்' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதையின் நாயகனாக சமுத்திரக்கனிக்கு அடுத்தடுத்து ரிலீஸ் | ரஜினியின் பிறந்தநாளில் 'டபுள்' அப்டேட்? | மாரி தொடரிலிருந்து வெளியேறுகிறாரா ஹீரோயின் ஆஷிகா படுகோன் | சைலண்டாக நிச்சயதார்த்தத்தை முடித்த தனுஷிக் | சீதாவின் தங்கையா இந்த வில்லி நடிகை | மீடியாவுக்கு குட்பை சொன்ன சுந்தரி நடிகை | அஜித் படத்தில் இருந்து வெளியேறியது ஏன்? - மனம் திறந்த விக்னேஷ் சிவன் | மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா |
இந்திய அளவில் ஹிந்தித் திரைப்படங்கள்தான் அதிக அளவிலான 100 கோடி வசூல் படங்களை வைத்துள்ளன. இதுவரையில் வெளிவந்த படங்களில் சுமார் 100 ஹிந்திப் படங்கள் 100 கோடி வசூலைப் பெற்ற படங்களாக உள்ளன. “பாகுபலி 2, கேஜிஎப் 2, டங்கல்' ஆகிய படங்கள் 1000 கோடி வசூலைப் பெற்ற படங்கள்.
தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் சில தென்னிந்திய மொழிப் படங்கள்தான் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. தமிழில் 30 படங்களும், தெலுங்கில் 10 முதல் 15 படங்களும், மலையாளத்தில் 7 படங்கள் வரையிலும் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன. ஆனால், கன்னடத்தில் மிகக் குறைவாக 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக இருக்கின்றன.
'கேஜிஎப்' படத்தின் முதல் பாகம்தான் முதன் முதலில் 100 கோடி வசூலைக் கடந்த கன்னடப் படமாக அமைந்தது. அதற்குப் பிறகு இந்த ஆண்டில் வெளிவந்த கிச்சா சுதீப் நடித்த 'விக்ராந்த் ரோணா', மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நடிப்பில் வெளிவந்த 'ஜேம்ஸ்', ரக்ஷித் ஷெட்டி நடித்து வெளிவந்த '777 சார்லி', மற்றும் யஷ் நடிப்பில் வெளிவந்த 'கேஜிஎப் 2' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன.
இப்போது அந்த வரிசையில் 100 கோடி வசூலைக் கடந்த படமாக ரிஷாப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் செப்டம்பர் 30ல் வெளிவந்த 'காந்தாரா' படம் நேற்று 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. மிகச் சிறிய படமாக தயாராகி வெளிவந்த இந்தப் படம் ஆச்சரியப்படும் விதத்தில் வெற்றியைப் பெற்றுள்ளது. எப்படியும் ஓடி முடியும் போது இந்தப் படம் மொத்த வசூலில் 200 கோடியைக் கடக்கும் என சாண்டல்வுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கன்னட சினிமாவில் இந்த ஆண்டில் வெளிவந்த 5 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.