சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அகில இந்திய மோட்டார் சைக்கிள் வீரர்களான சரத்குமார், ரஜினி கிருஷ்ணாவை தத்தெடுத்திருக்கிறார் நடிகர் சரத்குமார். நல்ல திறமையான விளையாட்டு வீரர்களை கண்டுபிடித்து அவர்களை சர்வதே அளவிற்கு கொண்டு செல்வதற்காக "எஸ்கே-சரத்69 ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட்" என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் பெரிய விளையாட்டு வீரனாக வரணும்னு ஆசைப்பட்டேன். பண வசதி இல்லாததால அது முடியல. அதனால என்னால முடிஞ்ச அளவுக்கு விளையாட்டு வீரர்களுக்கு உதவி பண்ணிக்கிட்டிருந்தேன். மோட்டார் சைக்கிள் வீரர் சரத்குமாரோட பேட்டி ஒரு பத்திரிகையில வந்துச்சு. அதுல அவர் உலகப் போட்டிகள்ல 3 வது இடத்துக்கு வந்தேன். அடுத்த வருட போட்டியில முதல் இடத்துக்கு வந்துடுவேன். அதுல கலந்துக்குற அளவுக்கு எங்கிட்ட பணம் இல்லேன்னு சொல்லியிருந்தார். அவரோட பெயரும் சரத்குமார்ங்றதால அந்த பேட்டி என்னை ரொம்ப பாதிச்சுது. இந்த சரத்குமாருக்கு கிடைக்காதது அந்த சரத்குமாருக்கு கிடைக்கட்டும்னு நினைச்சு அவரை தத்தெடுத்தேன். அவர் பெயரையும் என் பெயரையும் சேர்த்து இந்த நிறுவனத்தை தொடங்கியிருக்கேன். திறமையான விளையாட்டு வீரர்களை கண்டுபிடிச்சு, அவுங்களுக்கு முறையான பயிற்சி கொடுத்து உலக அளவுல கொண்டு நிறுத்துவதுதான் என்னோட நோக்கம் என்றார்.