பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் | 'விடாமுயற்சி' படத்தால் ரிலீஸ் இடைவெளி | எங்கள் ஆவணங்கள் சரியானவையே - தயாரிப்பாளர் தில் ராஜு | கல்யாணம் குறித்து கேள்வி : ஸ்ருதிஹாசன் டென்ஷன் | தர்ஷனுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உத்தரவு | பிளாஷ்பேக் : ஏவிஎம் படத்தில் நடிக்க மறுத்த ரஜினி |
சென்னை : நாடக ஆசிரியரும் நடிகருமான கிரேஸி மோகனின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு, பிரபல நடிகர் மவுலிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருதை, நடிகர் கமல்ஹாசன் வழங்குகிறார். நாடக ஆசிரியராகவும், நகைச்சுவை எழுத்தாளராகவும் பிரபலமடைந்தவர் 'கிரேஸி' மோகன். அவரது 70வது பிறந்த நாள், வரும் 16ம் தேதி 'கிரேஸி கிரியேஷன்ஸ்' சார்பில் கொண்டாடப்படுகிறது.
சென்னை தி.நகர் வாணி மஹாலில், கிரேஸி மோகன் ஜெயந்தி விழாவாக, மாது பாலாஜி உள்ளிட்ட குழுவினர் கொண்டாட உள்ளனர். அதன் ஒருபகுதியாக, 'கிரேஸி' மோகன் வாழ்நாள் சாதனையாளர் மற்றும் சிறப்பு விருதுகளை வழங்க உள்ளனர். அதன்படி, 'கிரேஸி' மோகனின் மானசீக குருவும், நடிகர், எழுத்தாளர், இயக்குனர் என பன்முகம் கொண்டவருமான மவுலிக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. கிரேஸி மோகன் சிறப்பு விருதுகள் நகைச்சுவை நடிகர் காத்தாடி ராமமூர்த்தி, கர்நாடக இசைப் பாடகி காயத்ரி கிரிஷ், டாக்டர் ராஜன் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.
இந்த விருதுகளை நடிகர் கமல்ஹாசன் வழங்க உள்ளார். அதைத் தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, 'கிரேஸி' மோகன் எழுதிய வெண்பாக்களை, 'கண்ணன் அனுபூதி' என்ற தலைப்பில், கர்நாடக இசைப் பாடகி காயத்ரி கிரிஷ், இசையமைத்து பாடுகிறார். மேலும், 'கிரேஸி' மோகன் இயக்கிய 'மேரேஜ் மேட் இன் சலுான்' நாடகம் 14ம் தேதியும், 'சாக்லேட் கிருஷ்ணா' நாடகம் 15ம் தேதியும், மாலை 7:00 மணிக்கு, வாணி மஹால் ஒபுல் ரெட்டி அரங்கில் மேடையேறுகிறது.