2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

இயக்குநர் பாலாஜி மோகன் தயாரிப்பில், பிரசன்னா, கனிகா, எஸ்.பி.பி.சரண், தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய நகைச்சுவை வலைத்தளத் தொடரான 'மேட் கம்பெனி', ஆஹா டிஜிட்டல் தளத்தில் இன்று (செப்டம்பர் 30) வெளியானது.
இது ஒரு காமெடி தொடர், திருமணத்திற்கு மணப்பெண், மணமகள் தேடித் தரும் மேட்ரிமோனி நிறுவனம் போன்று வாழ்க்கையில் தவறவிட்ட மனிதர்கள், தவிர விட்ட தருணங்களை மீண்டும் கொண்டு வந்து தருகிற நிறுவனம் பற்றிய கதைதான் இந்த தொடர், 8 எபிசோட்களை கொண்டது.
விக்னேஷ் விஜயகுமார் இயக்கி உள்ளார். தொடர் குறித்து அவர் கூறியதாவது: இந்த தொடரின் இந்த கான்செப்ட் என்னவெனில், நாம் நம்முடைய வாழ்க்கையில் யாரையாவது தவறவிட்டிருப்போம். இது போன்ற ஒருவர் நம்முடைய வாழ்க்கையில் வந்தால் நன்றாகயிருக்குமே என பல தருணங்களில் நினைப்போம். அது போன்ற விசயங்களை நடத்திக்காட்ட ஒரு நிறுவனம் இருந்தால்... அது தான் மேட் கம்பெனி. திடீரென்று ஒரு நபருக்கு முன் நின்று, நான் தான் உனது அண்ணன் என்றால்... அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். நம்பவும் மாட்டார். அதனால் ஏற்படும் நகைச்சுவையான சம்பவங்களை கொண்டதுதான் இந்த தொடர். என்கிறார் இயக்குனர்.