Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

புஷ்கர் பேச்சால் அதிர்ச்சியான ஹிருத்திக் ரோஷன்

30 செப், 2022 - 12:54 IST
எழுத்தின் அளவு:
Hrithik-Roshan-shocks-about-Pushkar-speech

தமிழில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் விக்ரம் வேதா. இந்த நிலையில் இந்த படம் இதே பெயரில் ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைப் அலிகான் நடிப்பில் உருவாகியுள்ளது. தமிழில் இயக்கிய இயக்குனர்கள் புஷ்கர் காயத்ரியே ஹிந்தியிலும் இயக்கி உள்ளனர் இன்று (செப்-3௦) இந்த படம் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு வருகின்றனர். அப்படி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் படத்தின் இயக்குனர்களில் ஒருவரான புஷ்கரிடம், பொன்னியின் செல்வன் படமும் இதே தேதியில் ரிலீஸ் ஆகிறது அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு பொன்னியின் செல்வன் மிகப்பெரிய படம்.. அதை எங்களால் பீட் பண்ண முடியாது. நாங்கள் அனைவரும் சேர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கப் போகிறோம். எப்படியும் சனி ஞாயிறுகளில் எங்கள் படத்திற்கு கூட்டம் நிச்சயம் வரும் என்று கூறினார்.

அவர் நாங்கள் அனைவரும் பொன்னியின் செல்வன் படத்தை இணைந்து பார்ப்போம் என்று சொன்னபோது ஹிருத்திக் ரோஷனின் முகம் சட்டென மாறி புஷ்கரை திரும்பி டென்சனுடன் ஒரு பார்வை பார்த்தார்.. அதன்பிறகு ஹிருத்திக் ரோஷன் பேசும்போது, “நான் இன்னும் அந்த நாவலைப் படிக்கவில்லை.. ஜஸ்ட் இப்போதைக்கு எனக்கு தெரிந்தது விக்ரம் வேதா மட்டும்தான்” என்று விறைப்பாக பேசியதிலிருந்து புஷ்கரின் பேச்சை அவர் ரசிக்கவில்லை என்பதை நன்றாகவே உணர முடிந்தது.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
21 வருடங்களை கடந்த தபுவின் சாந்தினி பார்21 வருடங்களை கடந்த தபுவின் சாந்தினி ... மகப்பேறு ஆடைகளை அறிமுகப்படுத்திய ஆலியா பட்! மகப்பேறு ஆடைகளை அறிமுகப்படுத்திய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
01 அக், 2022 - 06:04 Report Abuse
NicoleThomson அவரவர்க்கு அவரவர் வலி
Rate this:
SATHIK BASHA - INDIA,இந்தியா
30 செப், 2022 - 17:27 Report Abuse
SATHIK BASHA இயக்குனர் உண்மையை உரக்க சொல்லியிருக்கிறார் . ஹிருத்திக் ரசிச்ச என்ன ரசிக்கட்டி என்ன ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in