கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கிய படம் தேஜாவு. இதில் அருள்நிதி, ஸ்ருதி வெங்கட், மதுமிதா, நடிகர்கள் அச்யுத் குமார், காளி வெங்கட் மற்றும் மைம் கோபி ஆகியோர் நடித்துள்ளனர். எழுத்தாளர் ஒருவர் கற்பனையாக எழுதும் அனைத்து சம்பவங்களும் யதார்த்த வாழ்வில் நிகழ்வதைச் சுற்றி இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் எழுத்தாளர் சுப்பிரமணியாக நடிகர் அச்யுத் குமார் நடித்துள்ளார். அவர் எழுதும் கற்பனை கதையின் கதாபாத்திரங்கள் அனைத்தும் யதார்த்த வாழ்வில் தன்னை வந்து அச்சுறுத்துவதாக காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்கிறார். அவர் கூறுவதை அங்குள்ள யாரும் நம்பவில்லை.
இந்த நிலையில், கடத்தப்பட்ட ஒரு பெண் தப்பி வந்து காவல் நிலையத்தில், தான் கடத்தப்பட்டதில் எழுத்தாளர் சுப்பிரமணிக்கும் சம்பந்தம் உள்ளது என்று தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்படுகிறார். அப்போது, போலீஸ் அதிகாரி மதுமிதா மகள் ஸ்ம்ருதி வெங்கட் கடத்தப்படுகிறார். அவளை கண்டுபிடிக்க சிறப்பு அதிகாரி விக்ரம் குமாராக நடிகர் அருள்நிதி வருகிறார். சுப்ரமணியின் கற்பனை கதை எப்படி யதார்த்த வாழ்வில் உயிர் பெறுகிறது என்பதும் விக்ரம் தனது விசாரணையில் அவற்றை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுமே இப்படத்தின் மீதிக் கதையாகும்.
கடந்த ஜூலை மாதம் 22ம் தேதி தியேட்டர்களில் வெளியான இந்தப் படம் காந்தி ஜெயந்தி சிறப்பு திரைப்படமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாகிறது.