மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

ஆத்தா உன் கோவிலிலே, தமிழ் பொண்ணு, மிட்டா மிராசு ஆகிய படங்களில் நடித்த ரவி ராகுல், சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 'ரவாளி' படத்தை இயக்கியுள்ளார். ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் ஷா நைரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் நடிப்பு கல்லூரியில் முறைப்படி நடிப்பு கற்று மும்பையில் தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருக்கிறார். ஏராளமான ஆங்கிலம் மற்றும் இந்தி நாடகங்களில் நடித்துள்ளார்.
இவர்களுடன் ஜெயபிரகாஷ், பூ விலங்கு மோகன், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர். வினோத் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன் இருவரும் இணைந்து இசையமைத்து உள்ளனர்.
“தமிழ்நாட்டில் கட்டிட வேலை பார்க்கும் இந்திக்கார பையனை காதலிக்கும் தமிழ் பெண், அவனோடு ஓடிப்போய் திருமணம் செய்கிறார். திடீரென அவன் காணாமல் போக, அவனை தேடும் கதை தான் ரவாளி” என்கிறார் ரவிராகுல்.