சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் |
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தாயாரும், மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவியுமான இந்திரா தேவி(70) வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் இன்று(செப்., 29) காலமானார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்பவர் மகேஷ்பாபு. இவரது தந்தையான நடிகர் கிருஷ்ணாவும் அந்தக்காலத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். இவரது மனைவியான இந்திரா தேவி கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில தினங்களாக இவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
இந்திராதேவியின் உடல் அஞ்சலிக்காக ஐதராபாத்தில் உள்ள பத்மாலயா ஸ்டுடியோவில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வைக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரது குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இந்திராதேவியின் உடலுக்கு நாகார்ஜூனா, சுகுமார், ராணா, மோகன்பாபு, தமன், விஜய் தேவரகொண்டா, அல்லு அரவிந்த், கொரட்டலா சிவா, பிரபாஸ் உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர். ரசிகர்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருப்பதுடன் மகேஷ்பாபுவிற்கு ஆறுதல் கூறியும் கருத்து பதிவிட்டுள்ளனர்.
இதனிடையே பாட்டி இந்திராதேவியின் உடலை பார்த்து மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தேம்பி தேம்பி அழுவதும், அவரை மகேஷ்பாபு தேற்றும் வீடியோவும் வைலரானது.