குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
துல்கர் சல்மான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள சுப் திரைப்படம் இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இயக்குனர் பால்கி இயக்கியுள்ள இந்த படத்தில் சன்னி தியோல் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் துல்கர் சல்மான் இந்த பத்து வருடங்களில் தான் கடந்து வந்த திரையுலக பயணத்தையும் கடினமான விமர்சனங்கள் எதிர்கொண்டதையும் குறித்து வட இந்திய மீடியாக்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, கடந்த சில வருடங்களுக்கு முன்பு சார்லி என்கிற படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் சிறந்த நடிகர் என்கிற விருதை பெற்றேன். அந்த சமயத்தில் பலர் பாராட்டினாலும் சோசியல் மீடியாவில் நெட்டிசன் ஒருவர் இது குறித்து கிண்டல் அடித்ததை என்னால் மறக்க முடியவில்லை. தான் விருது பெற்றது குறித்து அவர் கூறும்போது, சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளீர்கள் இந்த விருதை விற்பதாக ஐடியா இருந்தால் சொல்லுங்கள்.. நான் நல்ல தொகை கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் எனக்கு கிண்டல் அடித்தார். அதை தொடர்ந்து நான் மன உளைச்சலுக்கு ஆளாகி அந்த இரவு தூங்க முடியாமல் நிம்மதி இழந்தேன்.
அதேசமயம் வேறு ஒரு ரசிகர் அவருக்கு பதில் தரும் விதமாக இந்த விருது அவருக்கு சாதாரணமாக கிடைத்து விடவில்லை. இத்தனை வருட உழைப்புக்கும் அந்த படத்தில் அவரது அர்ப்பணிப்பான நடிப்பிற்கும் தான் கிடைத்தது என்று கூறினார். அந்த ரசிகரின் பதிலை படித்ததும் தான் ஓரளவுக்கு மனம் அமைதியானது. இப்போது விமர்சனங்களையும் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள பழகி விட்டேன் என்று கூறியுள்ளார் துல்கர் சல்மான்.