நகுல் நடிக்கும் புதிய படம் ‛நிற்க அதற்கு தக' | இறைவன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரூ.300 கோடி பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் சக்திமான்! | வெளியானது பாவனா 86வது படத்தின் பர்ஸ்ட் லுக்! | மீண்டும் தமிழில் நடிக்கும் ஈஷா ரெப்பா | அகத்தியரின் மருத்துவ ரகசியம் சொல்லும் ‛பெல்' | தமிழில் ஹீரோயின் ஆன மலையாள நடிகை | கனிமொழியுடன் லிங்குசாமி திடீர் சந்திப்பு | கேரளாவில் தியேட்டர்கள் ஸ்டிரைக் | விருதுகளை பாத்ரூம் கதவின் கைபிடியாக்குவேன் : நசுருதீன் ஷா |
இயக்குனராக தனது சினிமா பயணத்தை துவங்கிய சமுத்திரக்கனி, இன்று ஒரு குணசித்திர மற்றும் வில்லன் நடிகராக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கியமான ஒரு நடிகராக மாறிவிட்டார். இந்த வருடத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான பல வெற்றி படங்களில் படங்களில் அவரும் முக்கிய கதாபாத்திரங்களில் ஒருவராக' நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் துணிவு படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சமுத்திரக்கனி. இந்த படத்தின் பர்ஸ்ட், மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் தற்போது வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார் சமுத்திரக்கனி. மஞ்சுவாரியர் கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று சொல்லப்படுகிறது.