சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
தமிழில் சசிகுமார் நடித்த வெற்றிவேல் சீமத்துரை மற்றும் பிகில் ஆகிய படங்களில் முக்கிய வாரத்தில் நடித்தவர் நடிகை வர்ஷா போலாமா பார்ப்பதற்கு நடிகை நஸ்ரியாவின் சாயலில் இருக்கும் இவர் சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரது புதிய அதிரடி செயலால் நெட்டிசன்கள் விட்டால் போதும் என தெரிவித்து ஓடுகின்றனர்.
அப்படி என்ன செய்து விட்டார் வர்ஷா என்றால் சோசியல் மீடியாவில் திடீரென ஒரு கேள்வி பதில் பகுதியை ரசிகர்களுடன் ஆரம்பித்த வர்ஷா அதில், "நான் பல நாட்கள் ஆராய்ச்சி செய்து சில கேள்விகளை கண்டுபிடித்துள்ளேன். அதற்கான பதிலை உங்களில் யாராவது கூறுங்கள்" என்று ஆரம்பித்துள்ளார். சரி ஏதோ பொது அறிவு கேள்வியாக இருக்கும் என நினைத்த நெட்டிசன்களுக்கு அவர் கேட்ட கேள்விகள் எல்லாம் கிறுகிறு தலையை சுற்ற வைத்து விட்டது.
உதாரணத்திற்கு அமெரிக்காவில் இருந்து இங்கே வரும் 'ஹனி பீ'யை எப்படி அழைப்பீர்கள் என கேட்டுவிட்டு யாருக்கும் பதில் தெரிய்தாததால் 'யுஎஸ்பி' என அழைக்கவேண்டும் என அவரே பதிலும் கூறியுள்ளார். கேள்விகள் எல்லாம் இதேபோல் எடக்கு மடக்காக இருக்கவே நெடிசன்கள் பலரும் ஆளைவிட்டால் போதுமடா சாமி என எஸ்கேப் ஆகிவிட்டனர்.