Advertisement

சிறப்புச்செய்திகள்

'வணங்கான்' படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகல்.. | நடிகை காயத்ரி ரகுராமின் பதவியை கைப்பற்றிய இசையமைப்பாளர் தினா! | ''திருப்பி அடிக்கும் போது தான் யாரு நீ-ன்னு புரியுமே'': வெளியானது வாரிசு ‛தீ தளபதி' பாடல் | புதுமுகம் அறிமுகம் - நடிகை கோபிகா உன்னிகிருஷ்ணன் | கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‛ரகு தாத்தா': ஹோம்பலே நிறுவனம் தயாரிக்கிறது | அஜித்தின் கதாபாத்திரம் மர்மமாகவே இருக்கட்டும்: மனம்திறந்த வினோத் | பாலிவுட்டுக்கு ‛சர்க்கஸ்' புது தெம்பை தரும் ; பூஜா ஹெக்டே நம்பிக்கை | சூடுபிடிக்கும் நகைச்சுவை நடிகர் பட டைட்டில் விவகாரம் | மலையாள குணச்சித்திர நடிகர் கொச்சு பிரேமன் காலமானார் | கேரளாவில் முடிவுக்கு வந்த அவதார்-2 ரிலீஸ் பிரச்னை |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஹிந்தி காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா காலமானார்

21 செப், 2022 - 11:14 IST
எழுத்தின் அளவு:
Hindi-Comedy-Actor-Raju-srivastav-no-more

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹிந்தி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா 59 காலமானார்.

ஹிந்தியில் காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராகவும், டி.வி.க்களிலும் நடித்து வந்தவர் ராஜூ ஸ்ரீவஸ்தவா. கடந்த 10ம் தேதி உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாயின.

ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை, வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த அவர் ஏறத்தாழ மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும், சுயநினைவு இன்றி இருப்பதாகவும் தொடர்ந்து தகவல் வந்தது. இந்நிலையில் இன்று(செப்., 21) அவரது உயிர் பிரிந்தது.

1963ம் ஆண்டு டிச., 25ம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் பிறந்த சத்ய பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா எனும் ராஜூ ஸ்ரீவஸ்தவா பாலிவுட்டில் ஆரம்பகாலங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்கள் அவரை பிரபலமாக்கின. நிறைய டிவி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். குறிப்பாக தி கிரேட் இந்தியன் லாட்டர் சேலஞ்ச் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்து மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார். இந்நிலையில் இவரின் மறைவு ஹிந்தி ரசிகர்கள், திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீவஸ்தவாவிற்கு ஷிகா என்ற மனைவியும், அந்தரா, ஆயுஸ்மான் என்ற இரு பிள்ளைகளும் உள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
பயம் காரணமாக பர்வீன் பாபி வீட்டை வாங்க தயக்கம்பயம் காரணமாக பர்வீன் பாபி வீட்டை ... சஞ்சய் கேரக்டருக்கு விஷக் நாயரை தேர்வு செய்தது எப்படி? - கங்கனா விளக்கம் சஞ்சய் கேரக்டருக்கு விஷக் நாயரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Columbus -  ( Posted via: Dinamalar Android App )
21 செப், 2022 - 16:20 Report Abuse
Columbus Raju Shrivastava was an excellent stand up comedian. He had no equal. But only those who follow Hindi can appreciate his performance. Om Shanti.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in