என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
தமிழில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் தடம் பதித்துள்ளவர் தனுஷ். இரண்டு தேசிய விருதுகள், நடிப்பு, தயாரிப்பு, இயக்கம், பாடல் எழுதுவது, பாடுவது என பல திறமைகளுடன் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.
ஆரம்ப கால கட்டங்களில் விஜய்க்குப் பிறகு அதிக விமர்சனங்களையும், எதிர்மறை கருத்துக்களையும் சந்தித்தவர் தனுஷ். அதன் பிறகு படிப்படியாக தனது திறமைகளை வளர்த்துக் கொண்டு இன்றுள்ள சிறந்த நடிகர்களில் அவரும் ஒருவர் என பாராட்டப்படுகிறார்.
தனுஷ் நடித்து 2011ம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஆண்டில் அதிகப் படங்கள் வெளியாவது இந்த 2022ம் வருடத்தில் நடக்க உள்ளது. 2002ல் 'துள்ளுவதோ இளமை' படம் மூலம் அறிமுகமான தனுஷ் நடிப்பில் 2011ம் வருடத்தில்தான் அதிகப் படங்கள் வெளிவந்தன. அந்த ஆண்டில் “ஆடுகளம், மாப்பிள்ளை, வேங்கை, மயக்கம் என்ன” ஆகிய படங்கள் வெளிவந்தன. 'சீடன்' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மொத்தமாக 5 தமிழ்ப் படங்கள்.
அதற்குப் பிறகு 2015ம் ஆண்டில் ''அனேகன், மாரி, தங்கமகன்” ஆகிய படங்கள் வெளிவந்தன. ஹிந்தியில் 'ஷமிதாப்' திரைப்படமும், சிறப்புத் தோற்றத்தில் நடித்த 'வை ராஜா வை' படமும் வெளிவந்தன. மொத்தமாக 4 தமிழ்ப் படங்கள், ஒரு ஹிந்திப் படம்.
அடுத்து இந்த 2022ம் ஆண்டில் தனுஷ் நடிப்பில் “மாறன், திருச்சிற்றம்பலம்” ஆகிய படங்கள் வெளிவந்தன. அடுத்து 'நானே வருவேன்' படம் இம்மாதக் கடைசியில் வெளியாக உள்ளது. இப்படத்திற்கான வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்கு முன்பே தனுஷ் நடித்து வரும் மற்றொரு படமான 'வாத்தி' படம் டிசம்பர் 2ம் தேதி வெளியாகும் என அறிவித்துவிட்டார்கள். இத்துடன் சேர்த்தால் தனுஷ் நடித்து இந்த ஆண்டில் நான்கு தமிழ்ப் படங்களும், 'த கிரே மேன்' ஆங்கிலப் படமும் அவருடைய கணக்கில் சேரும்.