ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தெலுங்கில் மகேஷ்பாபுவை வைத்து ஒக்கடு, அர்ஜுன், சைனிக்கூடு என வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் குணசேகர். அனுஷ்கா, ராணா, அல்லு அர்ஜுன் நடித்த ருத்ரமாதேவி என்கிற வரலாற்று படத்தை இயக்கிய குணசேகர், தற்போது சமந்தா கதாநாயகியாக நடிக்கும் சாகுந்தலம் என்கிற வரலாற்று படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ்மோகன் என்பவர் நடித்து வருகிறார். இவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் வெளியான சூஃபியும் சுஜாதையும் என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர்.
சாகுந்தலம் படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக பிரித்திவிராஜ் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் தேவ்மோகன். நேற்று இவரது பிறந்தநாளை முன்னிட்டு சாகுந்தலம் படக்குழுவினர் இவர் கம்பீரமாக குதிரையில் அமர்ந்தபடி இருக்கும் போஸ்டர் ஒன்றை பிறந்தநாள் பரிசாக வெளியிட்டுள்ளனர். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சமந்தா நடித்துவரும் யசோதா படத்தின் வெளியீட்டிற்கு பிறகு இந்த படம் வெளியாகும் என சொல்லப்படுகிறது