என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தமிழில் விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வரும் ராஷ்மிகா, ஹிந்தியில் குட்பை, மிஷன் மஜ்னு, அனிமல் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இதில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்துள்ள குட்பை படம் அடுத்த மாதம் 7ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது அப்படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ராஷ்மிகா மந்தனா. அப்போது மீடியாக்களுக்கு அவர் அளித்த பேட்டியில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க இருக்கும் புஷ்பா- 2 படம் குறித்த ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடிக்கும் புஷ்பா- 2 படத்தின் வேலைகளை இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்க போகிறேன். எனது கேரியரில் ஒரு முக்கியமான படமாக புஷ்பா அமைந்தது. ஹிந்தி படங்களில் கமிட்டாகி நான் நடித்து வந்த நேரத்தில் இப்படம் ஹிந்தியிலும் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதனால் ஹிந்தியில் நடிக்கும் படங்கள் வெளியாவதற்கு முன்பே புஷ்பா மூலம் ஹிந்தி ரசிகர்களுக்கு பரிட்சயமாகி விட்டேன். அதனால் புஷ்பா-2 படத்தில் நடிப்பதில் கூடுதல் ஆர்வமாக இருக்கிறேன். இந்த இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுனின் மனைவி ஸ்ரீவள்ளியாக நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா.