பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் | மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் |
இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' படம் இரு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, வந்தியத் தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் பிரமாண்டமாக தயாரித்து வருகின்றது. வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி இந்த படத்தின் முதல் பாகம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை சார்ந்த ஒரு சுவாரஸ்ய தகவலை எழுத்தாளர் ஜெயமோகன் வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் ஆரம்பகட்டத்தில் வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் விஜயையும், அருண்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் மகேஷ் பாபுவையும் நடிக்க வைக்க வேண்டும் என மணிரத்னம் விரும்பினார் என கூறியுள்ளார்.