சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் வீஜே தீபிகாவும், சரவண விக்ரமும் ஜோடியாக நடித்திருந்தனர். சீரியலை தாண்டி ஆப் தி கேமாராவிலும் இவர்கள் அடித்த லூட்டி அப்போதே இருவரையும் காதலர்கள் என பேச வைத்தது. ஆனால், இருவரும் எங்களுக்குள் இருப்பது வெறும் நட்பு தான் என விளக்கமளித்து வந்தனர். இதற்கிடையில், வீஜே தீபிகா சில காரணங்களால் வேறு சேனலுக்கு நடிக்க சென்றுவிட்டார். இருப்பினும் இருவருக்குமிடையே நெருக்கம் மட்டும் அதிகரித்து வருகிறது.
தற்போது வீஜே தீபிகாவும் சரவணம் விக்ரமும் சேர்ந்து விருமன் படத்தின் 'மதுர வீரன் அழகுல' என்ற பாடலுக்கு ஜோடியாக ரீல்ஸ் வீடியோ செய்து வெளியிட்டுள்ளனர். இதேப்போன்று மேலும் சில பாடல்களுக்கும் ரீலீஸ் வீடியோ வெளியிட்டுள்ளனர். அந்த வீடியோவில் அவர்களது கெமிஸ்ட்ரியை பார்க்கும் எவரும் இவர்கள் ரீல் ஜோடி என்று சொல்ல முடியாது. ரியல் ஜோடி என்று தான் சொல்லுவார்கள். அந்த அளவுக்கு வீஜே தீபிகா - சரவண விக்ரமின் கெமிஸ்ட்ரியும் நெருக்கமும் அதிகரித்துள்ளது.
எனவே சில ரசிகர்கள், 'நீங்கள் பரெண்ட்ஸ் கிடையாது. லவ்வர்ஸ் தானே. இனியும் பொய் சொல்ல வேண்டாம்'என நச்சரித்து வருகின்றனர். அதிலும் வீஜே தீபிகாவின் ரியாக்ஷனை பார்த்து, தீபிகா சரவண விக்ரம் மீதுள்ள தனது காதலை சூசகமாக சொல்லிவிட்டார் எனவும் பரப்பி வருகின்றனர்.