மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் |

தனுஷ்- ஸ்ருதிஹாசன் நடித்த 3 மற்றும் கவுதம் கார்த்தி நடித்த வை ராஜா வை போன்ற படங்களை இயக்கியவர் ஐஸ்வர்யா ரஜினி. தனுசை பிரியப்போவதாக அறிவித்த பிறகு ஹிந்தி படம் ஒன்றை அவர் இயக்கப் போவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா ரஜினி, கோவில்களில் வழிபாடு நடத்தும் வீடியோக்கள் மற்றும் தனது மகன்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.
இந்த நேரத்தில் தற்போது சில கோப்புகள் அடங்கிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி. அதோடு பேனாவைக் கொண்டு கதை எழுதுவது ஒருவித உணர்வு. முதன்முதலாக கதையை எழுதிவிட்டு இரண்டாவதாக தட்டச்சு செய்யும்போது சில மாற்றங்களை செய்வது வழக்கமானதாகும். காலப்போக்கில் நாம் தட்டச்சு செய்த பதிப்பை பார்க்கும் போது அதில் இருந்து ஒரு பேப்பரைக் கூட தூக்கி எறிய மனம் வராது. ஒவ்வொரு முறையும் நீங்கள் படிக்கும் போது அதில் ஏதாவது புதிய சிந்தனை வரலாம். அதனை அப்டேட் செய்து கொண்டிருக்கவே விரும்புவோம் என்று பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.