100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? | ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி | அருண் பிரசாத், அர்ச்சனா திருமண நிச்சயதார்த்தம் நடந்தது | பாட்டி மறைவு : அல்லு அர்ஜூன் உருக்கம் | தெரு நாய் தொடர்பான விவாத நிகழ்ச்சி : மன்னிப்பு கேட்டார் படவா கோபி |
தமிழில் மைனா, வேட்டை, தலைவா, தெய்வத்திருமகள், வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த அமலாபால் இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடால்அவரை விவாகரத்து செய்து பிரிந்தார். தொடர்ந்து ஜெய்ப்பூரை சேர்ந்த பிரபல பாடகரும் தனது நண்பருமான பவிந்தர் சிங்கை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்தும் விதமாக இருவரும் மணக்கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்களை பவிந்தர்சிங் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு பின்னர் நீக்கினார்.
அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி இருவரும் திருமணம் முடித்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஆனால் திருமணம் நடக்கவில்லை என்று அமலாபால் தரப்பில் மறுக்கப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள வீட்டில் அமலா பாலுக்கு பவிந்தர் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், பண மோசடி செய்ததாகவும் அமலா பால் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில், பவிந்தர் சிங்கை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.