அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

வெள்ளித்திரை நடிகர் சந்தோஷ் பிரதாப் விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். தொடர்ந்து விஜய் டிவியின் சில ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று வருகிறார். சமீப காலங்களில் இண்ஸ்டாகிராமில் குக் வித் கோமாளி பிரபலங்களுடன் சேர்ந்திருக்கும் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சந்தோஷ் பிரதாப் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் குக் வித் கோமாளி சுனிதாவின் பின்னால் காதலுடன் ஜொள்ளுவிட்டு திரிவது போன்ற வீடியோ பதிவை சந்தோஷ் பிரதாப் தற்போது வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் நெட்டீசன்கள் ஒருவேளை சந்தோஷ் பிரதாப் சுனிதாவை காதலிக்கிறாரா? என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால், உண்மையில் சந்தோஷ் சுனிதாவை காதலிக்கவில்லை. புதிய பிராஜெக்ட் ஒன்றில் சந்தோஷூம் சுனிதாவும் சேர்ந்து நடிக்க உள்ளனர். அதற்கான ஒரு சின்ன புரோமோ தான் இந்த வீடியோ. சோஷியல் மீடியாவில் வைரலாகி வரும் இந்த வீடியோவானது சந்தோஷ் - சுனிதாவின் புது ப்ராஜெக்ட் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.