ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
நீண்ட இடைவெளிக்கு பிறகு கருணாஸ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ஆதார். ராம்நாத் பழனிக்குமார் என்பவர் இயக்கி உள்ள இந்த படத்தில் அவருடன் இனியா, ரித்விகா உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஒரு அப்பாவித்தனமான வேடத்தில் நடித்திருக்கும் கருணாஸ், போலீசில் சிக்கிக் கொண்டு எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தப்படுகிறார் என்பதை மையமாகக் கொண்ட கதையில் ஆதார் படம் உருவாகி இருக்கிறது. வெண்ணிலா கிரியேசன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து உள்ள இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் செப்டம்பர் 22ம் தேதி திரைக்கு வருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.