ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் | மோகன்லால் பட வாய்ப்பை ஒதுக்கிய ரிஷப் ஷெட்டி | விருது வழங்கும் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட சூபியும் சுஜாதையும் | சத்தம் இல்லாமல் பாலிவுட் படத்தில் நடித்து முடித்த ஜோதிகா | அசீமிற்கு விருந்து கொடுத்த வனிதா | என் மீது பொய்வழக்கு : நித்யா பேட்டி |
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படி அவர் நடித்த முதல் படமே வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்தபடியாக மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்கிறார். மேலும், முதல் படத்தில் கிராமத்து வேடத்தில் நடித்துள்ள அதிதி ஷங்கர், மாவீரன் படத்தில் மாடர்ன் ஹீரோயினாக நடிக்கப் போகிறார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு பிடித்த ஹீரோ- ஹீரோயின் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் . அதில், சீனியர் ஹீரோக்களில் ரஜினிகாந்த் தனக்கும் மிகவும் பிடித்த நடிகர் என்று கூறியிருக்கும் அதிதி ஷங்கர், இளவட்ட ஹீரோக்களில் சூர்யாவை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். நடிகைகளில் சமந்தா என்னை மிகவும் கவர்ந்த நடிகை என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் அதிதி ஷங்கர்.