8 மணி நேரம்தான் நடிப்பேன் : ராஷ்மிகா சொல்வது சரியா, சாத்தியமா? | 'டாக்சிக்' படத்திற்கு அப்டேட் கொடுத்த தயாரிப்பு நிறுவனம் | கதைத் திருட்டு சர்ச்சையில் 'சக்தித் திருமகன்' | மோகன்லால் மகள் அறிமுகமாகும் படம்: துவக்கவிழா பூஜையுடன் ஆரம்பம் | விஷால் பாணியில் நடிகர் யஷ் ; 'டாக்ஸிக்' படப்பிடிப்பில் திடீர் திருப்பம் ? | கமல் மிஸ் பண்ணிய '20-20' பாடல் ; நடிகர் திலீப் புது தகவல் | ஸ்ரீலங்காவில் நடைபெறும் ராம்சரணின் 'பெத்தி' படப்பிடிப்பு | ஆங்கிலத்தில் டப்பிங் ஆகி வெளியாகும் முதல் படம் 'காந்தாரா சாப்டர் 1' | அப்பாவை இழந்தது அப்படிதான், தம் அடிக்கிற சீனில் நடிக்கமாட்டேன் : பூவையார் | 30 வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் : தமன்னா பேசியது ஏன் |

வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக அஜித் நடித்து வரும் 61வது படத்தில் அவருடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். வங்கிக் கொள்ளையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் இரண்டு விதமான வேடங்களில் அஜித் நடித்து வருவதாக கூறப்படுகிறது. அஜித் 61வது படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளார்கள். இந்த நிலையில் இந்த படத்திற்கு வல்லமை என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் , ஸ்ரீதேவியின் பிறந்த நாளான நாளை இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட உள்ளதாகவும்தகவல் வைரலாகி வருகிறது. ஆனபோதிலும் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் படக்குழு வெளியிடவில்லை.