என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை சிறப்பாக கொண்டாட தயாராகிறது. பல்வேறு மொழி, கலாச்சாரங்கள், பழக்க வழக்கங்கள் மற்றும் காலத்தால் அழிக்க முடியாத பல வரலாற்று சரித்திரங்களால் நாம் பலப்படுத்தப்பட்டுள்ளோம். இந்தியாவின் மகிழ்ச்சி, பெருமை மற்றும் சுதந்திரத்தைப் போற்றும் வகையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் இந்தாண்டு இந்தியாவின் பிரபலமான படங்களை வழங்குகிறது. அதன்படி நம் நாட்டின் பெருமையை பேசிய படங்கள், குடும்ப கிளாசிக் படங்கள், தனித்துவமான கதைகள் கொண்ட படங்கள், வாழ்க்கை வரலாற்று படங்கள், உணர்வுப்பூர்வமான படங்கள் என பல மொழிகளில் இருந்தும் பல விதமான படங்களை வழங்குகிறது. அவை என்ன படங்கள் என்பதை இங்கு பார்ப்போம்.
83
1983ல் கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து எடுக்க படம் 83. கபீர் கான் இயக்க, ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ஜீவா உள்ளிட்டோர் நடித்தனர்.
மேஜர் (தெலுங்கு)
2008ல் நாட்டை உலுக்கிய ஒரு சம்பவம் மும்பை பயங்கரவாத தாக்குதல். இதில் வீர மரணம் அடைந்த மேஜர் சந்தீப் உன்னிக்கிருஷ்ணன் வாழ்வை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் மேஜர். அதிவ் ஷேஷ், ரேவதி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சசி கிரண் டிக்கா இயக்கி இருந்தார்.
மைட்டி லிட்டில் பீம் : ஐ லவ் தாஜ் மஹால்
இந்தியாவின் அனிமேஷன் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கும். அந்தவகையில் பீம் கதாபாத்திரத்தை தழுவி வெளியான அட்வெஞ்சர் படம் தான் மைட்டி லிட்டில் பீம் : ஐ லவ் தாஜ் மஹால். உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை குடும்பத்துடன் காண செல்லும் சுட்டி பீமின் அட்டகாசமாக சாகசங்கள் படமாக வந்தது.
மின்னல் முரளி (மலையாளம்)
மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் வெளியான சூப்பர் ஹீரோ படம் மின்னல் முரளி. சாதாரண மனிதன் ஒருவருக்கு சக்தி வாய்ந்த பவர் கிடைக்கிறது. இதன் மூலம் அவர் சூப்பர் ஹீரோ ஆகிறார். அதன் பின் நடக்கும் நிகழ்வுகளை மையமாக வைத்து இந்த படம் வெளியானது.
நவரசா(தமிழ்)
கொரோனா காலக்கட்டத்தில் ஓடிக்காக நிறைய ஆந்தாலஜி படங்கள் வந்தன. அந்தவகையில் மணிரத்னம் தயாரிப்பில் ஒன்பது இயக்குனர்கள் இயக்கத்தில் ஒன்பது கதைகளாக வெளியான ஆந்தாலஜி படம் தான் இந்த நவரசா. தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களும், இயக்குனர்ளும் இந்த படத்தில் பணியாற்றி இருந்தனர்.
சபாஷ் மிது
இந்திய கிரிக்கெட் வீராங்கணை மிதாலி ராஜின் வாழ்க்கைகைய தழுவி எடுக்கப்பட்ட படம் ‛சபாஷ் மிது'. மிதாலி வேடத்தில் டாப்சி நடித்திருந்தார். ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கி இருந்தார். கிரிக்கெட்டில் சாதிக்க ஒரு பெண் சந்தித்த சவால்களும், பிரச்சனைகளையும் இந்த படம் பேசியது.
தி டிசிபிள்(மராத்தி)
சைதன்யா தம்ஹானே இயக்கத்தில் ஆதித்யா மொடா நடிப்பில் வெளியான மராத்தி படம் ‛தி டிசிபிள்'. இந்த கதை ஷரத் நெருல்கரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்தியாவின் சிறந்த பாரம்பரிய இசை பாடகராக ஆவதற்கான அவரின் தேடல் இந்த கதை.
லகான்
இந்தியாவின் சிறந்த படங்களில் லகான் படத்திற்கு இடம் உண்டு. சுதந்திர போராட்ட காலத்தில் நடக்கும் கதையாக விளையாட்டை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஆமீர்கான் முதன்மை வேடத்தில் நடித்திருந்தார். அஸ்தோஷ் கோவாரிக்கர் இயக்கி இருந்தார்.
லக்ஷயா
ரசிகர்களை மகிழ்விக்கவும், ஊக்குவிக்கவும் திரைப்படங்கள் உள்ளன. அப்படி இரண்டும் அமைந்த ஒரு படம் தான் ‛லக்ஷயா'. இதில் ஹிருத்திக் ரோஷன் நாயகனாக நடித்தார். வாழ்க்கையில் எந்தவித இலக்கும் இல்லாத இளைஞன் தனது உண்மையான நோக்கத்தை அறிந்து இந்திய ராணுவத்தில் இணைந்து சேவை செய்யும் விதமான கதையாக இந்த படம் அமைந்தது.
நாட்டின் 75வது சுதந்திர தின ஆண்டு கொண்டாட்டத்தோடு மேலே குறிப்பிட்ட படங்களை உங்கள் நெட்பிளிக்ஸ் தளத்தில் கண்டு மகிழுங்கள்.