பெத்தி படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய ராம் சரண் | அதிர்ஷ்டசாலி படத்திற்கு அதிர்ஷ்டம் | கடைசி நிமிடங்களில் கத்தாரில் இருந்து தப்பிய சந்தோஷ் நாராயணன் | கிராமத்து கோவிலில் சிறப்பு பூஜை நடத்திய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய ரியோ ராஜ் | அஜித் கார் ரேஸ் சினிமாவாகிறது : சிவகார்த்திகேயன், அனிருத் நடிக்கிறார்களா? | நான் கோமாளி அல்ல, ஏமாளி : கூல் சுரேஷ் கண்ணீர் | ஜூலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் : கருப்பு எப்போது... | 'டாடா' போஸ்டர் ஸ்டைலில் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' போஸ்டர் | சினிமாவை விட்டு விலக நினைத்தேன்: நிவேதிதா சதீஷ் |

நீண்டநாள் காதலர்களாக வலம் வந்த நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அடுத்த சில தினங்களில் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர். அதன்பின் அவரவர் பணியில் பிஸியாக இருந்தனர். நயன்தாரா ஹிந்தியில் ஷாரூக்கான் உடன் நடிக்கும் ஜவான் பட படப்பிடிப்பில் பங்கேற்றார்.
விக்னேஷ் சிவன் செஸ் ஒலிம்பியாட் துவக்க மற்றும் இறுதி விழா நிகழ்ச்சிகளை கலை நிகழ்ச்சிகளை முன்னின்று கவனித்து வந்தார். அவை வெற்றிகரமாக முடிந்து அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் ஓய்விற்காக ஸ்பெயின் பறந்துள்ளனர். ஸ்பெயினில் 10 நாட்கள் தங்குகின்றனர். பிறகு சென்னை திரும்புகின்றனர். அட்லீ இயக்கும் ஜவான் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொள்கிறார். அதேபோல் விக்னேஷ் சிவன் அஜித் நடிப்பில் இயக்கவிருக்கும் புதிய படத்தின் பணிகளைத் துவங்க இருக்கிறார்.
என்ன மீண்டும் ஒரு ஹனிமூன் கொண்டாட்டாமா என ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.




