இயக்குனர் சசி உடன் இணையும் நடிகர் சசிகுமார்! | கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இணைந்த விஷால்! | ரஹ்மானின் முன்னாள் மனைவி என சொல்லாதீர்கள்: சாய்ரா பானு வேண்டுகோள் | நடிகை பிந்து கோஷ் காலமானார் | தமிழகத்தில் 1000 தியேட்டர்களில் வெளியாகும் அஜித்தின் ‛குட் பேட் அக்லி' | முதலில் பேபி அடுத்து பேப்! அமலாபால் வெளியிட்ட வீடியோ பதிவு | 'பராசக்தி' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் | நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரம்மாண்ட ஹோம் ஸ்டுடியோ! | வெளியீட்டிற்குத் தயாரான சமந்தாவின் முதல் தயாரிப்பு 'சுபம்' | சம்பளத்தை உயர்த்த கமிஷன் வெட்டும் டிராகன் |
'ஆடை' படத்திற்கு பிறகு அதோ அந்த பறவை போல, கடாவர் போன்ற படங்களில் நடித்து வந்தார் அமலா பால். இதில் கடாவர் படம் வருகிற 12-ம் தேதி ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது அப்படத்தின் பிரமோசன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது அமலாபால் பல ஆண்டுகளாக நடித்து வந்த அதோ அந்த பறவை போல என்ற படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து அந்த படமும் ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில் ஆகஸ்ட் 26ம் தேதி திரையரங்கில் அப்படத்தை வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது . அந்த வகையில் அமலாபாலின் கடாவர் படம் ஓடிடி தளத்தில் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து, அதோ அந்த பறவை போல படம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. முக்கியமாக இந்த படத்திற்காக அமலாபால் தற்காப்பு கலைகளில் பயிற்சி எடுத்து டூப் இல்லாமல் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.