சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

‛விருமன்' இசை வெளியீட்டிற்காக மதுரை வந்த நடிகர் கார்த்தி அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் தரிசனம் செய்தார்.
முத்தையாக இயக்கத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் நடித்துள்ள ‛விருமன்' படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் கோலாகலமாக நடந்தது. இரவு 11 மணிக்கு வரை இந்த இசை வெளியீடு நீடித்தது. இந்நிலையில் கார்த்தி இன்று காலை ஆறு மணி அளவில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் தெற்கு கோபுரம் வழியாக சென்று அன்னை மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரரை தரிசனம் செய்தார்.
கார்த்தி கூறுகையில், ‛‛பல ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தது மன நிம்மதியை அளிக்கிறது என்றும், ஆத்ம திருப்தி அளிக்கிறது'' என்றும் தெரிவித்தார்.