காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
சென்னை : தயாரிப்பாளர்கள் அன்புச் செழியன், எஸ். தாணு ஆகியோரின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தினர்.
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் அன்புச் செழியன். கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் படங்கள் தயாரிப்பு, விநியோகத்திலும் ஈடுபட்டு வருகிறார். இதுதவிர பல படங்களுக்கு பைனான்ஸூம் செய்து வருகிறார். இன்றைக்கு தமிழில் பல படங்கள் உருவாகின்றன. அதில் பல படங்களுக்கு இவரின் பைனான்ஸ் இல்லாமல் இருக்காது. முன்னணி தயாரிப்பாளர்கள் தொடங்கி, நடிகர் வரை இவரிடம் பைனான்ஸ் பெற்று படங்கள் தயாரித்து வருகின்றனர். அந்தளவுக்கு தமிழ் சினிமாவில் இவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அன்புசெழியனுக்கு சொந்தமான சென்னை, மதுரை, தேனி, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் அவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று (ஆகஸ்ட் 2) காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தியாகராய நகர் பிரகாசம் சாலையில் உள்ள தாணுவின் அலுவலகத்திலும் சோதனை நடத்தியுள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு, ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா ஆகியோருக்கு சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
இதேப்போன்று அஜித்தை வைத்து விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜனின் அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இன்னும் சில தயாரிப்பாளர்கள் பெயரும் அதிகாரிகளின் சோதனை பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.