திரைப்படத் தொழிலாளர்களுக்கும் பங்கு: தெலுங்கானா முதல்வர் அறிவிப்பு | காந்தாரா சாப்டர் 1 : ஆன்லைன் இணையதளத்தில் 14 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை | மீண்டும் மகன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் ? | கேஜிஎப் ஒளிப்பதிவாளர் திருமணத்தில் கலந்து கொண்ட ஸ்ரீ லீலா | டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் |

தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்தாலும் தமிழில் மட்டுமே தன்னை சுருக்கிக் கொள்ள விரும்பாத விஜய்சேதுபதி, தெலுங்கு, மலையாளம், இந்தி என பான் இந்தியா நடிகராகவே மாறிவிட்டார். இந்தியில் இனிமேல் தான் அவரது படங்கள் ரிலீஸ் ஆக இருக்கின்றன. அதே சமயம் தெலுங்கில் உப்பென்னா என்கிற படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். அந்த படம் வெற்றி பெற்றதுடன் விஜய்சேதுபதி நடிப்புக்கும் நல்ல பெயர் கிடைத்தது.
அதேபோல மலையாளத்திலும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் நுழைந்த விஜய்சேதுபதி அந்த படத்தில் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடித்திருந்தார். ஆனால் படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. இதை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு விஎஸ் இந்து என்கிற பெண் இயக்குனரின் டைரக்ஷனில் 19 (1) ஏ என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். கடந்த வெள்ளி என்று நேரடியாக ஓடிடி தளத்திலேயே இந்த படம் வெளியானது.
இருந்தாலும் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் ரொம்பவே போர், மெதுவாக நகர்கிறது என விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் மலையாளத்தில் இந்த இரண்டாவது படமும் விஜய்சேதுபதிக்கு எதிர்பார்த்த வரவேற்பை கொடுக்கவில்லை. விஜய்சேதுபதியை வைத்து தமிழில் சில பரிசோதனை முயற்சியான படங்கள் வெளியாவது போல, மலையாளத்திலும் அதே பாணியை பின்பற்றுவதால் தான் இந்த இரண்டு படங்களும் வரவேற்பை பெறவில்லை என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.