ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய், தனுஷ் ஆகியோரை தொடர்ந்து சிவகார்த்திகேயனும் முதன்முறையாக பிரின்ஸ் என்கிற நேரடியாக தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஜதி ரத்னாலு என்கிற படத்தை இயக்கிய கே.வி.அனுதீப் இந்த படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரிஷபோப்ஷகா நடிக்கிறார். தெலுங்கு, தமிழ் என இருமொழி படமாக உருவாகும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு தமிழ்நாட்டிலும் நடைபெற்றுள்ளது.
அந்தவகையில் சமீபத்தில் இந்த படத்தின் பாடல் காட்சி ஒன்றை கடந்த நான்கு நாட்களாக பூந்தமல்லி அருகே உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படமாக்கி வந்தனர். இந்த நிலையில் பாடல் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாக விட்டாலும் இத்துடன் கிட்டத்தட்ட மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாகவும் இன்னும் பேட்ச் ஒர்க் மட்டுமே பாக்கி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.