பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
பீஸ்ட் படத்தை அடுத்து தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வர உள்ளது. அடுத்தபடியாக மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிக்க இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த நிலையில் விஜய்யின் 68வது படத்தை சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக செய்தி வைரலாகி வந்தது. டான் படத்தை இயக்கி வந்த போதே விஜய்யை சந்தித்து கதை சொல்லி அவர் ஓகே பண்ணி விட்டதாகவும் கூறப்பட்டது. இப்படியொரு செய்தி வெளியானதை அடுத்து தற்போது அதுகுறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் சிபி சக்ரவர்த்தி.
அவர் வெளியிட்டுள்ள செய்தியில், டான் படத்தை அடுத்து புதிய படத்திற்கான கதையை தற்போது தயார் செய்து வருகிறேன். இந்த கதை பணிகள் முடிவடைந்த பிறகுதான் இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்களோ அந்த நடிகரை சந்தித்து கதை சொல்லி கால்சீட் கேட்க திட்டமிட்டுள்ளேன். மற்றபடி விஜய்யை வைத்து நான் படம் இயக்க இருப்பதாக வெளிவந்த தகவல்கள் உண்மையில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். அதனால் விஜய்யின் 68வது படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குவதாக சோசியல் மீடியாவில் வைரலாகி வந்த செய்தி வதந்தி என்பது தெரிய வந்துள்ளது.