விஜயை விமர்சித்த நடிகையின் அனலி பட ரிசல்ட்? | சூரி படத்தின் பட்ஜெட் 75 கோடியா? | பத்து கோடியை தொட்ட சிறை | ஜனநாயகன் டிக்கெட் புக்கிங் எப்போது தெரியுமா? | ரஜினியை இயக்கும் ‛டான்' இயக்குனர் : 2027 பொங்கலுக்கு ரிலீஸ் | 'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் |

தமிழக அரசு சார்பில் மாமல்லபுரத்தில் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முன்னதாக கடந்த 28ம் தேதி பிரதமர் மோடி இந்த விழாவினை துவக்கி வைத்தார். இந்த ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒலிம்பியாட் ஆனந்தம் ஒன்றை உருவாக்கினார்கள். அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ. ஆர்.ரஹ்மான் மற்றும் செஸ் போட்டி வீரர்கள் பலரும் நடித்தார்கள். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோருக்கு எப்படி நடிக்க வேண்டும் என்று தான் சொல்லிக் கொடுத்த மேக்கிங் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் நடன மாஸ்டர் பிருந்தா. அதோடு, முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுடன் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்ததாக அவர் ஒரு பதிவில் தெரிவித்துள்ளார்.