'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் வாட்ச்மேன், கோமாளி, மன்மத லீலை போன்ற படங்களில் நடித்தவர் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே. இவர் தற்போது கன்னடத்தில் உருவாகி வரும் கிரீம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக ஒரு சண்டை காட்சியில் நடித்தபோது சம்யுக்தா ஹெக்டேவின் காலில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்கிறார். தனது தந்தையுடன் எடுத்த போட்டோவை வெளியிட்டுள்ள சம்யுக்தா ஹெக்டே, ஒரு பதிவும் போட்டு இருக்கிறார். அந்தப் பதிவில், இன்று காலையில் எழுந்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. கடந்த இரண்டு தினங்களாக மிகவும் கடினமாக உணர்ந்தேன். ஆனால் என்னை என் குடும்பம் அருகில் இருந்து பாதுகாத்து வருவதால் மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டு இருக்கிறார் சம்யுக்தா ஹெக்டே.