ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
அமீர்கான் புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கிரண் ராவ் மற்றும் வயாகம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் 'லால் சிங் சத்தா' படத்தில், அமீர்கானுடன் கரீனா கபூர் கான், மோனா சிங், நாசைதன்யா ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படம் ஆங்கிலத்தில் வெளியான 'பாரஸ்ட் கெம்ப்' எனும் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
படத்தின் தமிழ் பதிப்பை தமிழ்நாட்டில் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். தமிழ் பதிப்பிற்கான முன்னோட்டம் தற்போது வெளியாகியிருக்கிறது. ரெட் ஜெயண்ட் மூவீசில் 15வது ஆண்டு விழாவில் இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன், ஆமீர்கான் கலந்து கொண்டனர். 300 தியேட்டர்களில் படம் வெளியாகும் என்று தெரிகிறது. ஆமீர்கான் நடித்த பிகே, தங்கல் படங்கள் தமிழ் நாட்டில் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.