விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

1940களில் பரபரப்பாக பேசப்பட்ட ஒரு வழக்கு பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு. இந்த வழக்கில் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த தியாகராஜ பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் சிறை தண்டனை பெற்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பல கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளது. பல நூல்களும் வெளிவந்துள்ளது. தற்போது இது வெப் தொடராக தயாராகிறது.
இதனை சோனி லிவ் தளம் வெளியிடுகிறது. தி மெட்ராஸ் மர்டர் என்ற இந்த வெப் சீரிஸை சூரியபிரதாப் எழுதி இயக்குகிறார். இயக்குநர் விஜய் இந்தத் தொடரின் ஷோ ரன்னராக பணியாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியை பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் கார்த்திகேயன் தயாரிக்கிறார்.
இதுபற்றிய செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: பிரிட்டிஷ் இந்தியாவில் நடந்த கொலை வழக்கை அடிப்படையாகக் கொண்டு இந்த வலைத் தொடர் உருவாகிறது. சினிமா பிரபலங்களைப் பற்றி அவதூறான கட்டுரைகளை எழுதியதற்காக கொல்லப்பட்ட பிரபல பத்திரிகையாளரின் கொலையைச் சுற்றி கொலை வழக்கில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரின் தொடர்புகள் குறித்து அறியப்படாத சதிகளையும் மர்மங்களையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த தொடர் குறித்து ஏ.எல்.விஜய் கூறியிருப்பதாவது: மெட்ராஸ் பிரசிடென்சியில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் மிகவும் சவாலான தி மெட்ராஸ் மர்டர் தொடரில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பார்வையாளர்களுக்கு ஒரு புதுமையான மற்றும் அற்புதமான அனுபவத்தை வழங்க, எங்கள் முழு மூச்சுடன் உழைக்கும்.
அந்த காலகட்டத்தை மீண்டும் உருவாக்குவதற்கான அனைத்து பணிகளும் முழு அர்ப்பணிப்புடன் நடந்து வருகிறது. டிஜிட்டல் திரையில் சுதந்திரத்திற்கு முந்தைய சகாப்தத்தை காண காத்திருங்கள். இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.