நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | 'மகுடம்' இயக்குனர் நீக்கம் : விஷால் செய்தது நியாயமா ? | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி |
பிரபுதேவா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‛மை டியர் பூதம்' படம் வரவேற்பை பெற்றது. இதில் பூதமாக பிரபுதேவா நடித்திருந்தார். இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பால் பிரபுதேவாவின் படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். இருதினங்களுக்கு முன் இவர் நடித்துள்ள பஹிரா படம் ஆக.,11ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவர் நடித்துள்ள மற்றொரு படமான 'பொய்க்கால் குதிரை' ரிலீஸையும் அறிவித்துள்ளனர்.
'ஹர ஹர மஹாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து', 'கஜினிகாந்த்', 'இரண்டாம் குத்து' ஆகிய படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் இப்படத்தை தயாரித்துள்ளார் . இரு ஹீரோயின்கள் நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமாரும், ரைசா வில்சனும் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ஆக்ஷன் என்டெர்டெய்னர் ஜானரில் உருவாகி வரும் இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து, டிரைலரையும் வெளியிட்டுள்ளனர்.