ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு | மோகன்லாலுக்கு விருது கிடைத்ததை கொண்டாடிய திரிஷ்யம் படக்குழு | 8 மாதங்களுக்கு பிறகு மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பும் மம்முட்டி | 'ஜெய் ஹனுமான்' படம் : ரிஷப் ஷெட்டி தந்த அப்டேட் | 'குட் பேட் அக்லி' மற்றும் 'ஓஜி' ஒரே கதையா : இயக்குனர் பதில் | அடுத்து ஒரே ஒரு பெரிய ரிலீஸ் மட்டுமே… | பிளாஷ்பேக் : ரஜினிகாந்துக்கு எழுதிய கதையில் நடித்த விஜயகாந்த் | பிளாஷ்பேக்: ஹீரோவாக நடித்த ஏ.பி.நாகராஜன் | ஏஐ வீடியோக்கள், ஆபாச தளம் : டில்லி உயர்நீதி மன்றத்தில் நாகார்ஜுனா வழக்கு | ஆஸ்கருக்கு செல்லும் சூர்யா மகளின் ஆவணப்படம் |
ஆர்ட்ஷி மீடியா புரொடக்ஷன் மற்றும் இண்டோ - சைனீஷ் கோ புரொடக்ஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில் இந்தியாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படமாக ‛லட்கி' உருவாகியுள்ளது. நாயகியை மையமாக வைத்து உருவாகும் இப்படம் தமிழில் ‛பொண்ணு' என்ற பெயரில் வெளியாகிறது. மார்ஷியல் ஆர்ட்ஸ் வீராங்கனை பூஜா பலேகர் முதன்மை பாத்திரத்தில், சண்டை காட்சிகளில் அசத்தியுள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு,சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் ராம் கோபால் வர்மா பேசியதாவது: இந்தப்படம் எனக்கு மிகவும் சவாலான மனதிற்கு பிடித்த படம். கல்லூரி நாட்களில் இருந்தே புரூஸ்லி என் இதயத்திற்கு நெருக்கமானவராக இருந்துள்ளார். அவரின் படங்கள் போல் இந்தியாவில் மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் வந்ததில்லை. நான் இயக்குநராக வந்த பிறகு மார்ஷியல் ஆர்ட்ஸ் படங்கள் எடுக்கலாம் என நினைத்தேன். ஆனால் அது தள்ளிப்போனது. இறுதியாக இந்தப்படம் எடுக்க நினைத்த போது புரூஸ்லீயின் உருவம் என் மனதில் வந்து போனது. திரையில் அவர் தரும் மேஜிக் அற்புதமானது. அதே நேரம் ஒரு பெண்ணை வைத்து எடுத்தால் என்ன என எனக்கு தோன்றியது. பலரை தேடி கடைசியாக பூஜா பலேகர் குறித்து கேள்விபட்டு சந்தித்தேன். அவரின் திறமைகள் பார்த்து வியந்தேன்.
அவரின் வீடியோவை மார்ஷியல் ஆர்ட்ஸ் பிறப்பிடமான சைனாவின் ஒரு கம்பெனியிடம் காட்டினேன். அவர்கள் ஆச்சர்யப்பட்டார்கள். பிறகு இந்தப்படத்தை அவர்களுடன் இணைந்து தயாரித்தேன். கோவிட் காரணங்களால் இந்தப்படம் தாமதமாகிவிட்டது. அனைத்து மொழிகளிலும் இந்தப்படத்தை ஒரே நேரத்தில் அனைத்து மொழியிலும் வெளியிட வேண்டும் என திட்டமிட்டோம். என் கனவு இப்போது நனவாகியிருப்பது சந்தோஷம். இவ்வாறு பேசினார்.