'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு பிறகு பார்த்திபன் ஒரே ஷாட்டில் இயக்கியுள்ள படம் இரவில் நிழல். இந்த படத்திற்கு ஏ. ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஜூலை 15ம் தேதி வெளியிட பார்த்திபன் தயாராகி வரும் நிலையில், தற்போது நவீன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதில், விருது பெரும் நோக்கத்துடன் இரவின் நிழல் என்ற படத்தை அகிரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் நடிகர் பார்த்திபன். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நவீன் என்டர்பிரைசஸ் என்ற எங்கள் நிறுவனத்திடம் எடுத்திருந்தார்.
ஆனால் ஏற்கனவே பேசப்பட்ட வாடகை தொகையில் 25 லட்சத்து 13 ஆயிரத்து 738 ரூபாயை அவர் இன்னும் செட்டில் செய்யவில்லை. அதனால் இரவின் நிழல் படத்தை ஜூலை 15ம் தேதி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தை சார்ந்த பாஸ்கர் ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எஸ். சத்தியமூர்த்தி, இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது நிறுவனத்தின் இயக்குனரான அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.